சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அனுமதி

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையமும் முடிவு செய்துள்ளது.

Web Desk
Updated: December 7, 2018, 9:12 PM IST
சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு அனுமதி
சசிகலா
Web Desk
Updated: December 7, 2018, 9:12 PM IST
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம், வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இதுதொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டனர். ஆனால், அவர் மவுன விரதம் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போனது. இதை தொடர்ந்து, அண்மையில், பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திற்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியது.

இதற்கு, தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், வருகின்ற 13 மற்றும் 14-ம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையில், ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையமும் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்