• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு பூத் ஸ்லிப் போல நினைவூட்டும் சீட்டு வழங்கல்!!

தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு பூத் ஸ்லிப் போல நினைவூட்டும் சீட்டு வழங்கல்!!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னையில் 85% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் மக்களுக்கு மெகா தடுப்பூசி முகாமுக்கு முன்பாக வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் போன்று நினைவூட்டும் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

  • Share this:
    சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்ட 55 லட்சத்து 58 ஆயிரத்து 939 பேர் உள்ளனர். இவர்களில் 47 லட்சத்து 37 ஆயிரத்து 144 பேர் அதாவது 85.2% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 23 லட்சத்து 67 ஆயிரத்து 670 பேர் அதாவது 42.6% பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தாத சுமார் 4 லட்சம் பேர் சென்னையில் உள்ளனர்.

    எனவே முதல் டோஸ் செலுத்தாத 15% பேருக்கும், இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தாதவர்களுக்கும், வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் போன்று அவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் தடுப்பூசி முகாம் எங்குள்ளது, எப்போது செல்லலாம் என்ற நினைவூட்டும் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    இவை தவிர செல்போனில் குறுஞ்செய்திகளும் அனுப்பப்ப்டுகின்றன. சென்னையில் வரும் சனிக்கிழமை 1600 இடங்களில் நடைபெறவுள்ள ஏழாவது மெகா தடுப்பூசி முகாம்களுக்கு மக்களை வரவழைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    சென்னையில் 100% பேருக்கு முதல் டோஸ் ஒரு மாதத்தில் போடப்படும் என சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையர் மனிஷ் நர்நவாரே கூறுகிறார். 85% முதல் டோஸ் செலுத்தியிருப்பது ஓரளவு பாதுகாப்பான சூழல் என்றாலும் பண்டிகை காலம் என்பதால் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது அவசியம் என்கிறார்.

    சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட 95,845 பேர், மாற்று திறனாளிகள் 14,988 பேர், கர்ப்பிணி தாய்மார்கள் 16,194 பேர், பாலூட்டும் தாய்மார்கள் 9,241, வியாபாரிகள் 41,658 பேர், மால்களில் பணிபுரியும் 6,752 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    வயது     முதல் டோஸ்     இரண்டாவது டோஸ்

    18-44                  45.3%.                    22.1%
    45+                       98.8%.                   62.9%

    மொத்தம்          85.2%                 42.6%

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: