Home /News /tamil-nadu /

நிலவின் தென் துருவப் பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

நிலவின் தென் துருவப் பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும் - மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

மயில்சாமி அண்ணாதுரை (கோப்புப்படம்)

மயில்சாமி அண்ணாதுரை (கோப்புப்படம்)

”ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியதால் எப்படி அமெரிக்கா இளைஞர்களுக்கு விஞ்ஞானத்தில் ஒரு புத்துணர்ச்சி வந்ததோ, சந்திரயான் 2-ன் பயணமும் இந்திய இளைஞர்களுக்கு விஞ்ஞான உலகில் ஆர்வத்தை அதிகரிக்கும்”

  • News18
  • 1 minute read
  • Last Updated :
யாரும் பார்த்திராத நிலவின் தென் துருவப் பகுதியில் கால் பதிப்பதற்காக ஒரு சவாலான செயலை இந்தியா செய்ய உள்ளது என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாங்க் ஆப் பரோடா தொடங்கப்பட்டதன் 112 ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழக அறிவியல் தொழில் நுட்ப கழகத்தின் துணைத் தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

மேலும், "பசுமை புரட்சியின்" தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், பாடகி நித்யஸ்ரீ மஹாதேவன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது,

”ஜூலை 20 -ம் தேதி ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தார். அதை அறிவியல் உலகமே இன்று கொண்டாடுகிறது. இந்த நிலையில் சந்திராயன்-2 இதுவரை யாரும் பார்த்திராத நிலவின் தென் துருவப் பகுதியில் கால் பதிப்பதற்காக ஒரு சவாலான செயலை செய்ய உள்ளது.

பல நாடுகள் இதுவரை நிலவில் இறங்குவதற்காக முயற்சித்த போதிலும், இந்த முறை நம்முடைய சந்திரயான்-2 நிலவின் தென் துருவப் பகுதியில், செப்டம்பர் முதல் வார வாக்கில் பத்திரமாக இறங்கி, ஆறு சக்கர வாகனம் பிரக்யான் வேலை செய்ய ஆரம்பித்து, பின்னர் அதன் வழியே செய்தித் தொடர்பு நிலவிற்கு வரும்பொழுது , உலகிலேயே நிலவின் தென் துருவ பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழும். இது மற்ற உலக நாடுகளை இந்தியாவை திரும்பிப் பார்க்க வைக்கும் செயலாக இருக்கும்.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியதால் எப்படி அமெரிக்கா இளைஞர்களுக்கு விஞ்ஞானத்தில் ஒரு புத்துணர்ச்சி வந்ததோ, சந்திரயான் 2-ன் பயணமும் இந்திய இளைஞர்களுக்கு விஞ்ஞான உலகில் ஆர்வத்தை அதிகரிக்கும்” என்று கூறினார்.

Published by:Sankar
First published:

Tags: About chandrayaan 2, Chandrayaan, Chandrayaan 2, Chandrayaan 2 date, Chandrayaan 2 in tamil, Chandrayaan 2 isro, Chandrayaan 2 lander name, Chandrayaan 2 launch date, Chandrayaan 2 launch time, Chandrayaan 2 live launch, Chandrayaan 2 mission, Chandrayaan 2 news, Chandrayaan 2 photos, Chandrayaan 2 tamil news, Chandrayaan 2 video, India chandrayaan 2, ISRO, Isro chandrayaan 2, Isro chandrayaan 2 launch, Isro launch, Lander chandrayaan 2, Live chandrayaan 2, Name of chandrayaan 2, What is chandrayaan 2

அடுத்த செய்தி