ஈஷா மையம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி: விளக்கம் அளித்த நிர்வாகம்

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம், அரசு சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து 17 பஞ்சாயத்துக்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஈஷா மையம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி: விளக்கம் அளித்த நிர்வாகம்
ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம், அரசு சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து 17 பஞ்சாயத்துக்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
  • Share this:
ஈஷா மையம் குறித்து சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று ஈஷா மையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஈஷா மையத்தில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நவராத்திரி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வெளிநாட்டினர் கலந்துகொண்டிருந்ததால், அவர்கள் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என்று சர்ச்சைகள் எழுந்தன. அதுகுறித்து விளக்கம் அளித்த ஈஷா மையம், ‘கூட்டத்தில் கலந்துகொண்ட யாருக்கும் கொரோனா இல்லை என்று விளக்கம் அளித்தது. இந்தநிலையில், ஈஷா மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘ஈஷா யோகா மையத்துக்கு ஆம்புலன்சும் அமரர் ஊர்தியுமும் அடிக்கடி வந்து செல்வதாக சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இது திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்படும் பொய் பிரச்சாரம். ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம், அரசு சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து 17 பஞ்சாயத்துக்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போதைய சவாலான சூழலிலும் மக்களுக்கு சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். இதற்காக, ஈஷாவின் வாகனங்கள் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவச் சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஏப்ரல் 5-ம் தேதி ஊடகங்களுக்கு ஒரு பத்திரிக்கையை செய்தியை அனுப்பி உள்ளோம்.


ஆகவே, ஈஷா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளைக் கொண்டு எவ்வித செய்தியும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்’என்று குறிப்பிட்டுள்ளனர்.

Also see:
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading