முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உங்கள் பெயர் மாரியப்பனா? கால் டாக்சி நிறுவன விளம்பரம் வைரல்

உங்கள் பெயர் மாரியப்பனா? கால் டாக்சி நிறுவன விளம்பரம் வைரல்

உங்கள் பெயர் மாரியப்பனா? கால் டாக்சி நிறுவன விளம்பரம் வைரல்

உங்கள் பெயர் மாரியப்பனா? கால் டாக்சி நிறுவன விளம்பரம் வைரல்

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனை கௌரவப்படுத்தும் விதமாக சேலத்தில் இயங்கி வரும் கால்டாக்சி நிறுவனம், மாரியப்பன் என்ற பெயர் கொண்டவர்களுக்கு மூன்று நாட்களுக்கு கட்டணமில்லா சலுகை அறிவித்துள்ளது.

  • Last Updated :

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24-ம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்க வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன்  பங்கேற்றார். ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி தங்க பதக்கம் வென்றிருந்தார்.

ஆகையால், இந்த முறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்றதால் பலரது பாராட்டுகளை பெற்றார். சில நாட்களுக்கு முன்  அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டிக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Also Read : புதிய வாகனங்களுக்கு கட்டாய பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து

இந்த நிலையில் சேலம் மாவட்த்தைச் சார்ந்த  பதக்க நாயகன் மாரியப்பனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சேலத்தில் இயங்கி வரும் மேங்கோ கால் டாக்சி நிறுவனம் கட்டண சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற பெயர் கொண்டவர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு கால்டாக்சி பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த மூன்று நாட்களும் சேலம் நகரப் பகுதிக்குள் பயணம் மேற்கொள்ள மேங்கோ கால்டாக்சியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Salem, Tokyo Paralympics