முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Thoothukudi Sterlite : ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோர் வாரிசுகளுக்கு இரண்டு அரசு வேலையா...?

Thoothukudi Sterlite : ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோர் வாரிசுகளுக்கு இரண்டு அரசு வேலையா...?

மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார்

மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கிராம உதவியாளர்களாகவும், சமையலராகவும் பணிநியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வாரிசுதாரர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

2018ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் கொடும் காயமடைந்தவர்கள் 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களாகவும் மற்றும் சமையலராகவும் பணிநியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 16 நபர்கள் அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபர் ஈப்பு ஓட்டுநராகவும் பணி நியமனம் வழங்கிட தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கைகளை அளித்திருந்தனர்.

தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து மேற்படி நபர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறைகளில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களாகவும், ஒரு நபருக்கு ஈப்பு ஓட்டுநராகவும் பணி நியமன ஆணைகளை 21.5.2021 (நேற்று) மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூகநலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன், மாண்புமிகு மீனவளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப.,, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Must Read : ஜூன் 3ம் தேதிக்குள் அடுத்த தவணை 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை போராட்ட கலவரங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை ஓய்வு பெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் 14.05.2021 அன்று இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார். இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீதான தமிழக அரசின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Explainer, MK Stalin, Thoothukudi gun shoot, Thoothukudi Sterlite