அமமுக தலைமையில் மூன்றாவது அணி?

டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும்.

 • Share this:
  அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை இராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா படத்திற்கு டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

  ஜெயலலிதாவின் எண்ணப்படி 100 ஆண்டிற்கும் ஆட்சி நீடிக்க ஜெயலலிதாவின் உடன் பிறப்புகள் இணையவேண்டும் என்கிற சசிகலாவின் கருத்து குறித்து பேசுகையில், அவர் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களை குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

  சசிகலா அமமுகவிற்கு ஆதரவு தருவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த தினகரன், அது குறித்து சசிகலாவிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

  இந்தியாவிலேயே ஊழலில் முதன்மையானவர் எடப்பாடி பழனிச்சாமி என்று ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுகதான் என்றார்.

  மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார். அதிமுகவில் அமமுக இணையும் என்று காங்கிரஸ் கட்சியயை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் சொல்லியதில் உண்மையில்லை என்று தினகரன் கூறினார்.

  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன், இன்று சசிகலாவை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், “10 ஆண்டுகாலமாக அதிமுக கூட்டணியில் இருக்கும் நாங்கள் ஒவ்வொரு முறை ஜெயலலிதாவை சந்திக்கும்போதும் சசிகலாவை சந்திப்போம்.

  ஒரு குடும்பம்போல் பழகி இருக்கிறோம். அவரிடம் உடல்நலம் விசாரிக்கவே வந்தோம். நன்றி மறப்பது நன்றன்று. நன்றி மறவாமல் அவரை சந்தித்து நலம் விசாரித்தோம்” என்று தெரிவித்தார்.

  இந்நிலையில், அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்வுவதாக இருக்கின்றது.

  Must Read : சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு... நன்றி மறப்பது நன்றன்று என பேட்டி
  Published by:Suresh V
  First published: