அனைத்து ஆதி திராவிடர் காலனிகளில் இருந்து மயானம் செல்வதற்கு சாலை வசதி உள்ளதா?- நீதிமன்றம் கேள்வி

அனைத்து ஆதி திராவிடர் காலனிகளில் இருந்து மயானம் செல்வதற்கு சாலை வசதி உள்ளதா?- நீதிமன்றம் கேள்வி

கோப்புப் படம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூர் ஆதி திராவிடர் காலனி, சென்னகரம் பட்டி, நடுப்பட் டி ஆகிய ஆதிதிராவிடார் காலனிகளில் இருந்து மயாணம் செல்வதற்கு எப்போது சாலை வசதி செய்து கொடுப்பீ ர்கள்?

 • Share this:
  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூர் , சென்னகரம் பட்டி ஆதி திராவிடர் காலடினிகளில் இறந்த உடலை, சாலை வசதி இல்லாமல் வயல்வெளியில் கொண்டு செல்லும் அவலம் குறித்து வெளியான செய்தியை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து (SUMOTO) வாக விசாரணைக்கு எடுத்த கொண்ட வழக்கில், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

  அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிட காலனிகளில் இருந்து சுடுகாட்டிற்கு செல்வதற்கு சாலை வசதி உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  மேலும், எத்தனை ஆதி திராவிட காலனிகளில் சாலை வசதி உள்ளது? என்றும், எத்தனை ஆதி திராவிட காலனிகளில் இருந்து மயானத்திற்கு சாலை வசதி இல்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  தமிழக அரசின் ஆதி திராவிடர் துறையை ஏன் தூய தமிழில் அழைக்க கூடாது? என்று கேள்வி எழுப்பியதுடன், ஆதி திராவிடர் நலத்துறையை, தூய தமிழில் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  மேலும், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூர் ஆதி திராவிடர் காலனி, சென்னகரம் பட்டி, நடுப்பட் டி ஆகிய ஆதிதிராவிடர் காலனிகளில் இருந்து மயனம் செல்வதற்கு எப்போது சாலை வசதி செய்து கொடுப்பீ ர்கள்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  இந்த வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
  Published by:Suresh V
  First published: