Home /News /tamil-nadu /

காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

புதுச்சேரியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் விடுமுறை விடப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மருந்து இருப்பு நிலை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போல மாய தோற்றம் கடந்த சில நாட்களாக செய்திகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எங்கும் தட்டுப்பாடு இல்லை. மருந்து கிடங்கு அலுவலர்கள் பணி மாற்றம் செய்யப்படும் போது அதன் காரணமாக ஒரு சிலர் விஷமத்தனத்துடன் ஊடகத்திடம் தவறான தகவல் தெரிவித்துள்ளனர்.

327 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் ஆகும் . அவை தமிழ்நாட்டில் போதிய அளவில் உள்ளன.  மாவட்டந்தோறும் மருந்து கிடங்கு என தமிழ்நாடு முழுவதும் கிடங்குகள் அமைக்கப்படுகின்றன. IV fluids மருந்துகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மை. உக்ரைன் போர் காரணமாக மருந்து அடைக்கப்படும் குப்பிகள் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. அது உடனே சீர் செய்யப்பட்டது.

மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என புகார் இருந்தால் 104 உதவி எண்ணில் அழைக்கலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு  centre of excellence for rare diseases எனற சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

ALSO READ | நாங்கள் செல்லும் பாதையே பெரியார் பாதை தான் - மு.க.ஸ்டாலின் பேச்சு
 குழந்தைகளுக்கான காய்ச்சல் கொரோனாவுக்கு முன்பு, எவ்வளவு இருந்ததோ அந்த அளவுக்கு தான் இப்போதும் உள்ளது.  H1N1 காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 282 ஆக இருந்தது. இன்றைக்கு கூடுதலாக 41பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இதுவரை இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் காரணமாக தமிழகம் முழுவதும் 4740 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே தேதியில் 5000-க்கும்  மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனவே இது இயல்பான ஒன்று தான். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆகையால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டிய சூழல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Ma subramanian

அடுத்த செய்தி