Home /News /tamil-nadu /

Exclusive | தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறதா? அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி

Exclusive | தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறதா? அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் பாஜக உள்ளதா? எங்கையாவது நாளிதழில் அறிக்கை பார்த்துள்ளேன் அவ்வளவு தான். எதாவது செய்துள்ளார்களா? அதை தான் கேட்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா?  என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய இந்த மனு மீது விசாரணை நடத்தியது.

    அப்போது, பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின் படி, 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையே முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

    மத்திய அரசு, தமிழக அரசு, பேரறிவாளன் தரப்பு வாதங்களைக் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேதி அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தது. இந்தநிலையில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதனையடுத்து, பேரறிவாளன் விடுதலைத் தீர்ப்பை தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் வெடிவெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நியூஸ்18 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பேரறிவாளன் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விடுதலை சிறையில் இருந்தே அளிக்கப்பட்டுள்ளது. குற்றத்தில் இருந்து அல்ல. பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது சட்டப்படி தவறு. இந்த வழக்கில் சதி நடந்திருப்பதாக கருதுகிறேன். உச்சநீதிமன்றம் அரசு தரப்பை 3 முறை கேட்டும், அரசு அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.



    அரசு பதிலளிக்காததால், நாங்கள் தனி அமர்வு ஏற்படுத்தி அரசியல் சாசன சட்டப்படி கலந்தாலோசித்து முடிவு எடுப்போம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் இருவர் மட்டுமே முடிவை எடுத்துள்ளனர். அதுவும், சட்டப்பிரிவு 142ல் விடுதலை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமே கிடையாது என்று கூறினார்.

    தொடர்ந்து, அவரிடம் தமிழக பாஜகவின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் பாஜக உள்ளதா? எங்கையாவது நாளிதழில் அறிக்கை பார்த்துள்ளேன் அவ்வளவு தான். எதாவது செய்துள்ளார்களா? அதை தான் கேட்கிறேன்.

    முல்லை பெரியார் நான் செய்தேன். பாஜக செய்யவில்லையே, முத்துராமலிங்கதேவர் சிலை நான் தான் வைத்தேன். பாஜக செய்யவில்லையே. அதனால், தமிழகத்தில் பாஜக இல்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழி தான் இருக்கிறது.

    ஜனதா கட்சியில் இருப்பவர்கள் யாருக்கு இவர்கள் அழைப்பு கொடுக்கவில்லையோ, தனியாக இருப்பவர்கள் அவர்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்தால் பாஜக மேல் வளர முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து மறைமுகமாக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிப்பது போல் உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Subramanian Swamy

    அடுத்த செய்தி