வெள்ளை அறிக்கை: பழைய 60:40 பங்கீட்டுப் பாசத்தில் திமுக அரசு நடந்து கொள்கிறதோ? டிடிவி தினகரன் சந்தேகம்

டிடிவி தினகரன்

பழைய 60:40 பங்கீட்டுப் பாசத்தில் திமுக அரசு நடந்து கொள்கிறதோ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை சரிந்துவிட்டது. கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பே வருமானம் சரிந்துவிட்டது.

  வருவாய் பற்றாக்குறை இப்படி இருப்பதால், நிதி பற்றாக்குறை கட்டாயம் அதிகரிக்கும். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் கடனைச் செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.

  Also read: அரசு பேருந்து ஒரு கி.மீ ஓடினால் தமிழக அரசுக்கு ரூ.59.15 நஷ்டம்: நிதியமைச்சர் பி.டி.ஆர்.

  மேலும், சொத்து வரி, போக்குவரத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை? யாரிடம் வரியை வாங்குவது என்று அதிமுக அரசுக்கு தெரியவில்லை. தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி, 2 கோடியே 16 லட்சத்து 24,238 குடும்பங்கள் எனக் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

  இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

  அப்படி ஒரு முடிவினைத் திமுக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' அமைந்துவிடும்.

  அதற்கு பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.1 லட்சம் கோடியை அதற்குக் காரணமானவர்களிடம் இருந்து மீட்டெடுக்கும் வேலையைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டுப் பாசத்தில் திமுக அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்றத் தமிழக அரசு முயலக் கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: