ஒட்டனந்தல் சம்பவம்; காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? கமல் கண்டனம்

இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம் இந்த கிராமத்தில் கடந்த 12ம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துள்ளனர்..

  இந்த நிலையில் தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி தாழ்த்தப்பட்ட பகுதி மக்களை அழைத்து வரச் சொல்லி அவர்களை காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளனர். அதன்படியே அந்த கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த திருமால், சந்தானம், ஆறுமுகம் ஆகியோர் ஊர்மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து வணங்கியுள்ளனர்.

  இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

  இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?

  திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும்" என பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: