வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றம்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது, பிற உலக நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, உரிய வகையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை.

 • Share this:
  இந்தியாவில், உறுமாறிய பிரிட்டன் வகை கொரோனா  20 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து வரும் விமான பயனிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  மனுவில், இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும், பிற உலக நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, உரிய வகையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை என்றும் கூறி, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

  இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றதா என்று கேள்வி எழுப்பியது. மேலும், இது குறித்து மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

  இந்நிலையில், அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களையும் பரிசோதிக்க நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது நீதிமன்றம்.
  Published by:Suresh V
  First published: