Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணமா? அண்ணாமலை பதில்

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணமா? அண்ணாமலை பதில்

அண்ணாமலை

அண்ணாமலை

Power cut in tamil nadu: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்துள்ளது. அப்படி இருந்தும் எதற்காக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது.

    தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணமா என்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

    தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக இரவு நேரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில், இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

    இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிலைமை உடனடியாக சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக என்று அவர் தெரிவித்திருந்தார். எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு நீடித்து வருகிறது.

    இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20ம் தேதி மொத்தமுள்ள 5 யூனிட்களில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. அதற்கு போதுமான அளவு மின்தட்டுபாடு ஏற்படவில்லை அதன் காரணமாக 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்துள்ளது. அப்படி இருந்தும் எதற்காக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது.



    தமிழகத்தில் செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி அதன் மூலமாக தனியார் மின்சாரத்தை கொள்முதல் செய்து லாபம் பார்ப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை. 2021 மார்ச் முதல் 2022 பிப்ரவரி வரை மட்டும் ரூ.2000 கோடிக்கு மேல் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளனர்.

    இதுபோல செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன்மூலமாக சந்தையில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் அரசியல் ஊழலில் ஈடுபடுகின்றர். குறிப்பாக சில சமயங்களில் தனியாரிடம் இருந்து கிலோ யூனிட்டை ரூ.20க்கு கொள்முதல் செய்ததை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

    மின்வெட்டு: தமிழகத்திற்கு போதுமான அளவு நிலக்கரி வழங்குவதை உறுதி செய்க.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    இதுபோல இந்தமுறையும் இவர்கள் செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். 72,000 டன் நிலக்கரி தமிழகத்துக்கு எப்போது தேவையென்றால், தமிழகத்தில் இருக்க கூடிய 5 மின் உற்பத்தி நிலையங்களும் 85 சதவீதம் மின் உற்பத்தி செய்யம்போது தான் 72,000 டன் நிலக்கரி தேவைப்படும் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, BJP, DMK, Power cut, Senthil Balaji

    அடுத்த செய்தி