ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.720 கோடிக்கு மது விற்பனையா? அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.720 கோடிக்கு மது விற்பனையா? அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

டாஸ்மாக்

டாஸ்மாக்

டாஸ்மாக் விற்பனை தொடர்பாக பரவும் தகவல் உண்மையல்ல- அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் டாஸ்மாக் கடைகளில் 720 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

  தீபாவளி பண்டியையொட்டி தமிழ் நாட்டில் கடந்த மூன்று நாட்களில் 708 கோடி ருபாய்க்கு  மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. அதன்படி, அக்டோபர் 22ம் தேதி  205 கோடி ரூபாய்க்கும், 23ம் தேதி 258 கோடி ரூபாய்க்கும், தீபாவளி தினமாக நேற்று ரூ.244 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றதாக தகவல் பரவியது.

  இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதனை மறுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் , தீபாவளிக்கு முன்பாக டாஸ்மாக் இலக்கு என எதையும் நிர்ணயிக்கவில்லை என்றும் தீபாவளிக்கு பிந்தைய மதுமான விற்பனை குறித்த விவரங்கள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கே வந்து சேரவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Deepavali, Tasmac