Home /News /tamil-nadu /

எருமை கூடத்தான் கருப்பு.. அது திராவிடரா? -சீமான் கேள்வி

எருமை கூடத்தான் கருப்பு.. அது திராவிடரா? -சீமான் கேள்வி

சீமான்

சீமான்

Seeman: மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியது சர்ச்சை ஆன நிலையில் அது குறித்து பேசிய சீமான், இளையராஜாவின் கருத்து அவரது சொந்த கருத்து. அதனை விமர்சிக்க தேவையில்லை என தெரிவித்தார். 

    இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தன்னை தமிழன் என்றும் திராவிடன் என்றும் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள எல்லோரும் கருப்பாக உள்ளதால் அவர்களும் திராவிடர்களா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

    இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் தீவிரமாக இயங்கிவருகிறார். அவர் வெளியிடும் சில புகைப்படங்களும் அதற்கு அவர் பதிவிடும் கேப்ஷன்களும் பரபரப்பை ஏற்படுத்தும்.  I am a தமிழ் பேசும் Indian  என்ற வாசகங்களுடன் கூடிய டி-சர்ட்டை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படமும் அதை தொடர்ந்து இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் டிரண்ட் ஆனதும் அனைவரும் அறிந்தது.

    இந்நிலையில், நேற்று, தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட யுவன், டார்க் திராவிடன் - பெருமைமிகு தமிழன் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். இதுவும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், ஒன்று தமிழனாக இருக்க வேண்டும் அல்லது திராவிடனாக இருக்க வேண்டும்.

    இரண்டு அடையாளம் கிடையாது என்பதில் யுவன் தெளிவாக இருக்க வேண்டும். மோடிகூட திராவிடர் என்றும் தானும் திராவிடர் என்றும் ஹெச்.ராஜாவும் கூறுகிறார். தேவைப்பட்டால் இந்தியன், திராவிடன், தமிழன் என்கிறீர்கள். ஏன் இவ்வளவு குழப்பம். எதற்கு இத்தனை முகமூடி. யுவன் குழப்பம் அடையாமல் இருக்க வேண்டும். தான் பெருமைக்குரிய கன்னடன் என்று நடிகர் யாஷ் கூறுகிறார்.

    இதையும் படிங்க: பாலிடெக்னிக் படிப்பு... மாணவர்களிடையே ஆர்வம் இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி


    அதுமாதிரி, நான் தமிழன் என்று யுவன் பெருமையாக கூறவேண்டும்.  யுவன் சின்ன பிள்ளை. அவருக்கு தெரியவில்லை. எல்லாவற்றையும் விமர்சனம் செய்யும் நோக்கில் இருந்தால் அதுவே நோயாகிவிடும். தென்னாப்பிரிக்காவில் எல்லோரும் கருப்பாக இருக்கிறார்கள், அவர்கள் திராவிடர்களா. எருமை மாடும் கருப்பாக உள்ளது. அது திராவிடரா என்று விமர்சித்தார்.

    மேலும் படிக்க: மோடியை புகழ்ந்த இளையராஜா... திராவிடன் எனப் பெருமைப்படும் யுவன்... எதிரெதிர் துருவத்தில் அப்பா-மகன்?

    மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியது சர்ச்சை ஆன நிலையில் அது குறித்து பேசிய சீமான், இளையராஜாவின் கருத்து அவரது சொந்த கருத்து. அதனை விமர்சிக்க தேவையில்லை என தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Dravidam, Seeman, Yuvan Shankar raja

    அடுத்த செய்தி