• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்லி சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் - சசிகலா ஆடியோ முக்கிய காரணமா?

டெல்லி சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் - சசிகலா ஆடியோ முக்கிய காரணமா?

சசிகலா - ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்

சசிகலா - ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்

“சசிகலா வந்ததுக்கு அப்புறம், சசிகலா இல்லாம அரசியல் பண்றது ரொம்பக் கஷ்டம்”

  • Share this:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து, சேலத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். ஓபிஎஸ் உடன் மனோஜ் பாண்டியன் சென்றுள்ள நிலையில், இபிஎஸ் உடன் எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர்.

சமீபத்தில் அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. அதில் தான் “நான் சீக்கிரம் வந்துவிடுவேன்” என்று தொடர்ந்து கூறி வந்தார் சசிகலா. அதனைத் தொடர்ந்து, தொலைக்காட்சிகளிலும் சசிகலா பேட்டியளித்து வருகிறார். அதில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை என வெளிப்படையாக சொல்லும் சசிகலா, “செயற்குழு, பொதுக்குழுவில் தொண்டர்கள் முடிவின்படி என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது” என்றும் “இரட்டை தலைமையை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” எனவும் கூறிவருகிறார்.

அவ்வாறு, தொடர்ந்து வெளியாகும் சசிகலா ஆடியோ, அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை, அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் தேர்வு, அதிமுக உட்கட்சித் தேர்தல், கட்சி பொதுக்குழு கூட்டம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாக கூறப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள், மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்கப்படாதது போன்ற பிரச்சினைகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பானது, மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு போன்றவை குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்காக அதிமுக தலைவர்கள் சென்றிருப்பதாக சொல்லப்பட்டாலும், அதிமுகவிற்குள் நிலவும் பூசல்களே முக்கியத்துவமானது என்றும் சொல்லப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே சசிகலாவை அதிமுகவில் இணைத்து வைக்கவே பாஜக மேலிடம் விரும்பியதாக கூறப்பட்டது. எனினும் சசிகலா இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுக தலைவர்கள் பாஜக தலைமையிடம் உறுதியளித்ததாக அப்போது சொல்லப்பட்டது. எனினும், தேர்தலில் கொங்கு மட்டும்தான் அதிமுகவுக்கு பெரிய அளிவல் கை கொடுத்தது.

அதிமுகவில் மொத்தமுள்ள 52 மாவட்டக் கழகங்களில் மிகக்குறைவான மாவட்டங்களில் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மற்ற மாவட்டங்களில் அவ்வாறு செய்யவில்லை. பலரும் சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தும் போஸ்டர் அடித்து ஒட்டியும் வருகின்றனர். அவ்வாறு செய்பவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் தொடர்ந்து அறிவித்து வருகின்றர். இந்த பின்னணியில் சசிகலாவை நோக்கி அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் செல்லக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரை முதல் நாளே சென்று ஓபிஎஸ் சந்தித்த நிலையில், அதற்கடுத்த நாள் இபிஎஸ் சந்தித்தார். அப்போது சசிகலாவும் அங்கு சென்றார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அவைத் தலைவரான மதுசூதனனிடம்தான் முறைப்படி தேர்தல் ஆணையம் வழங்கியது.

Must Read : தமிழகத்தில் கலை-அறிவியல் கல்லூரி சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

வழக்கு சசிகலாவுக்கு சாதகமாக வந்து, அவர் பொதுச்செயலாளராக ஆகிவிட்டால் தற்போது இருக்கும் நிர்வாகிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்று அதிமுக நிர்வாகிகள் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னர், எப்படி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பாஜக சேர்த்து வைத்த்துபோல சிகலாவையும் தற்போது அதிமுகவுக்குள் கொண்டு வரும் திட்டம் பாஜகவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் டெல்லிக்குச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

டிசம்பர் 2019ல் “சசிகலா சிறையில் இருந்து வெளியேவந்தால் அதிமுகவினர் சசிகலா பக்கம் போவார்கள். கட்சியை நல்ல முறையில் நடத்த சசிகலாவுக்கு திறமை உள்ளது என எதிர்பார்கின்றேன்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

மேலும், 2019 பிப்ரவரியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, “சசிகலாவோடு பாஜக கூட்டணி அமைக்க வேண்டும்” என்றார். 2020 மார்ச் மாதம் அவர் பேசுகையில், “சசிகலா வந்ததுக்கு அப்புறம், சசிகலா இல்லாம அரசியல் பண்றது ரொம்பக் கஷ்டம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: