ரஜினி கட்சி தொடங்கினால், மு.க ஸ்டாலின் போராட வேண்டியிருக்கும்.. - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து

ரஜினி கட்சி தொடங்கினால், மு.க ஸ்டாலின் போராட வேண்டியிருக்கும்.. - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து

அமைச்சர் மா.பாண்டியராஜன் (கோப்புப் படம்)

திடீரென கூட்டத்தைப் பார்த்ததால் முதலமைச்சர் கனவு காண்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்தார்.

 • Share this:
  நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கே போராட வேண்டியிருக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

  திருவள்ளூரில் குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த திமுக தலைவர் ஸ்டாலின், திடீரென கூட்டத்தைப் பார்த்ததால் முதலமைச்சர் கனவு காண்பதாக விமர்சித்தார்.  Also read: நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்..

  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.கே.எஸ்.இளங்கோவன், “தளபதி எதிர்க்கட்சித் தலைவராக வரப்போவதில்லை. முதலமைச்சராக வரப்போகிறார். ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். நேரடியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார சீரழிவு, வேலையின்மை, நோய்ப்பரலை கட்டுப்படுத்தாத கையாளாத அரசுகளாக அதிமுக, பாஜக ஆகியவை உள்ளன. இவர்களுக்கு மாற்றாக திமுக-வை ஆட்சிக்குக் கொண்டுவந்தால்தான் தமிழகம் செழிக்கும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
  Published by:Rizwan
  First published: