ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருக்கிறாரா? விரைந்தது தனிப்படை

ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருக்கிறாரா? விரைந்தது தனிப்படை

பணம் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji) டெல்லியில் பதுங்கி  இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • 1 minute read
 • Last Updated :

  ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 13ஆவது நாளாக தேடி வருகிறது.

  அதன்படி, கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

  Must Read : ஆவினில் ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திர பாலாஜிதான் காரணம்: அமைச்சர் நாசர்

  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை டெல்லிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  First published: