ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திரையரங்குகள் கிடைக்காததால் தள்ளிப்போகும் பிரபுதேவாவின் தேள்?

திரையரங்குகள் கிடைக்காததால் தள்ளிப்போகும் பிரபுதேவாவின் தேள்?

தேள் படத்தை ஹரிகுமார் இயக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் படமாக இது தயாராகியிருக்கிறது. இதில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார்.

தேள் படத்தை ஹரிகுமார் இயக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் படமாக இது தயாராகியிருக்கிறது. இதில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார்.

தேள் படத்தை ஹரிகுமார் இயக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் படமாக இது தயாராகியிருக்கிறது. இதில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :

ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் தேள் திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், படம் வெளியாக வாய்ப்பில்லை என தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் தமிழில் தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. சூர்யா, கார்த்தி படங்களை தொடர்ச்சியாக தயாரித்தவர்கள். அடுத்து விக்ரம் நடிப்பில் இரஞ்சித் நடிக்கும் படத்தையும் இவர்களே தயாரிக்கிறார்கள். அவர்களின் ஒரு படம் திரையரங்கு கிடைக்காமல் தள்ளிப் போவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தேள் படத்தை ஹரிகுமார் இயக்கியிருக்கிறார். ஆக்ஷன் படமாக இது தயாராகியிருக்கிறது. பிரபுதேவா நாயகன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான எந்தப் படமும் ஓடவில்லை. குறிப்பாக கடைசியாக ஓடிடியில் வெளியான பொன்மாணிக்கவேல் படத்துக்கும் வரவேற்பில்லை. இதனால் திரையரங்குகள் தேள் படத்தை வெளியிட ஆர்வம் காட்டவில்லை.

அதேநேரம் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகும் ஜெயில், டிசம்பர் 10-ம் தேதி வெளியாகும் ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை வெளியிடவே அனைவரும் விரும்புகிறார்கள். இந்தப் படங்கள் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை தேள் தராததால் படத்தை திரையிட பெரும்பாலான திரையரங்குகள் முன்வரவில்லை. இதன் காரணமாகவே தேள் தள்ளிப் போயுள்ளது.

இதனால் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு பாதிப்பில்லை என்கிறார்கள். அவர் இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஏற்கனவே மேஜிக் ரேய்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அதனால், படம் வெளியாகாத தலைவலி இனி அவர்களுடையது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: