• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச்செயலகம் ஆகிறதா?

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச்செயலகம் ஆகிறதா?

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச்செயலகம் ஆகிறதா?

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச்செயலகம் ஆகிறதா?

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், அகற்றப்பட்ட கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் தலைமைச்செயலகமாக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த 2006-11-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் கருணாநிதி புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமை செயலகம் வசதியாக இல்லை என்பதால், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.629 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை அமைத்தார்.

    கருணாநிதி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சோனியாகாந்தி முன்னிலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இந்த கட்டிடத்தை கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி நேரில் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த தலைமை செயலக அலுவல்கள் மாற்றப்பட்டன. சட்டசபை கூட்டமும் இங்கு நடைபெற்று வந்தன.

    இதனிடையே, 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது, முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட கட்டிடம் வசதியாக இல்லை எனக்கூறி, தலைமை செயலகம் அலுவல்கள், சட்டசபை நிகழ்வுகளை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியமைத்தார்.

    பின்னர் பயனற்று போன அந்த கட்டிடத்தை அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி உதயமானது. முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்தநாளையொட்டி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், தென்சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்பதும் அடங்கும்.

    Also read: திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண விழா - சசிகலா பங்கேற்பு

    இதைத்தொடர்ந்து, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மீண்டும் தலைமைச்செயலக அலுவல்கள், சட்டசபை நிகழ்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், புதிய சட்டப் பேரவை தலைமை செயலக வளாகம்’ என்ற கல்வெட்டு அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அந்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் இந்த கல்வெட்டு பொருத்தப்பட்டுள்ளது.

    அந்த கல்வெட்டில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி அன்று கருணநிதி தலைமையில் சோனியாகாந்தி முன்னிலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சட்டசபை அரங்கம், தலைமை செயலக கட்டிடத்தை திறந்து வைத்த விவரம் இடம் பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: