• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரை ஆதீனம் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைப்பு - நித்தியானந்தா அறிக்கை எதிரொலி?

மதுரை ஆதீனம் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைப்பு - நித்தியானந்தா அறிக்கை எதிரொலி?

மதுரை ஆதீனம் - நித்யானந்தா

மதுரை ஆதீனம் - நித்யானந்தா

மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக நித்யானந்தா தன்னை குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
நித்தியானந்தாவின் அறிக்கை வெளியான நிலையில், மதுரை ஆதீன மடத்தில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் 292 வது பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாசக் கோளாறு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முதல் அவரது உடல் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தில் அவர் பயன்படுத்திய அறை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ள நிலையில் அதனை, தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நேற்றிரவு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் (அருணகிரி) ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.

அவர் கடந்த 2012 ஏப்ரல் 27 அன்று நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்தார். அப்போது கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, 2012 டிசம்பர் 19 அன்று அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார். பின்னர், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார்.

நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, பின் வாபஸ் பெறப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் கடந்த 2018 மே மாதம் நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.



Must Read : மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதி யார்? - சர்ச்சை கிளப்பும் நித்யானந்தா அறிக்கை

அப்போது, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில், தன்னை 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார் நித்தியானந்தா. அந்த குறிப்புகள் நித்தியானந்தா முறைகேடாக தயாரித்தவை என ஆதீன மடம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தது. அந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.‘



இந்நிலையில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தன்னை குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நித்தியானந்தா தன்னை 293 வது ஆதீனமாக குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போதைய ஆதீனத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: