Home /News /tamil-nadu /

நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுக திரும்பினால் ஏற்றுக்கொள்வீர்களா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுக திரும்பினால் ஏற்றுக்கொள்வீர்களா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுக பக்கம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, அதிமுக ஒரு ஆலமரம் போன்றது அது அனைவருக்கும் நிழல் தரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவில் தனக்கு தலைவர் பதவி தராதது வருத்தம் அளிப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் மன வருத்தம் காரணமாக மீண்டும் அவர் திராவிட கட்சிகளை நோக்கி செல்ல தொடங்குவதாக தகவல்கள் வெளியாயின. குறிப்பாக அதிமுகவில் அவர் பலகாலம் பல்வேறு பொறுப்புகளை வகித்து அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நயினார் நாகேந்திரன் செல்வாக்கு மிக அதிகம் என்று கூறப்படும் இந்த சூழ்நிலையில் அவர் திமுகவுக்கு செல்ல போகிறாரா அல்லது அதிமுகவுக்கு செல்லப் போகிறாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க...போன் செய்தால் போதும்... வீடு தேடி வரும் வகை வகையான மதுபாட்டில்கள்... - 2 பேர் கைது

இந்த நிலையில், நியூஸ் 18-க்கு இது தொடர்பாக பிரத்யேக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அப்போது, பாஜகவில் வருத்தத்தில் இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு இதுகுறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்றார்.

அதிமுக என்பது ஒரு ஆலமரம், அது அனைவருக்கும் நிழல் கொடுக்கும். நயினார் நாகேந்திரன் கடினமான உழைப்பாளி என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை,எனவே இது குறித்து தலைமை உரிய முடிவெடுக்கும் என்றார்.

வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு நயினார் நாகேந்திரன் போன்ற செல்வாக்குமிக்க மனிதர்களின் பங்களிப்பு அவசியம் என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, அதிமுகவில் அனைவருமே முக்கியமானவர்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் மிகவும் அவசியமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, Nainar Nagendran

அடுத்த செய்தி