மயிலாப்பூர் தொகுதியில் போட்டியா?- கமல்ஹாசன் பதில்

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியா?- கமல்ஹாசன் பதில்

கமல்ஹாசன்

கூட்டணி குறித்து இப்போது முடிவு சொல்ல முடியாது என்றார் கமல்ஹாசன்.

 • Share this:
  2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது அவர் கூறுகையில், ஐந்தாம் கட்ட பரப்புரையின் போது, மக்களிடம் பேரெழுச்சியை பார்க்கிறோம், இது சந்தோஷமாக இருக்கின்றது என்றார்.

  தொழில் துறைக்கான 7 வாக்குறுதி அறிவிக்கிறோம் என்று கூறிய கமல்ஹாசன், அவற்றை பட்டியிலிட்டார். அதன்படி, புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகள் குறித்த அமைச்சரவை; சிறு, குறு, நடுத்தர தொழில்களை வலுப்படுத்துதல்; குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு; அமைப்பு சாரா தொழிலாளர்கள் முறைப்படுத்துதல்; ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் பார்க் அமைக்கப்படும்; தொழில் துவங்க அனுமதியை எளிதாக்குதல் என்று தெரிவித்தார்.

  மேலும் படிக்க... என்னை முதலமைச்சராக தேர்வு செய்தது சசிகலா அல்ல - முதலமைச்சர் எடப்பாடி பழனினாமி

  இதனைத் தொடர்ந்து, மக்கள் நீநி மய்யத்திற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்காது என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, பதிலளித்த கமல், அது அவரது பிரார்த்தனை என்றார். மேலும், எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது என்றும் கூறினார்.

  மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், அது தகவல் தான் என்றும் அதை நான் சொல்லவில்லை எனவும் கூறினார்.

  மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் பதிளித்தார். கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், கூட்டணி குறித்து இப்போது முடிவு சொல்ல முடியாது என்றும் பதிலளித்தார்.
  Published by:Suresh V
  First published: