ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டி?

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டி?

கமல்ஹாசன்

சென்னையில் மயிலாப்பூர், தி. நகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிவாரியாக அதிக வாக்குகளைப் பெற்றது மக்கள் நீதி மய்யம்.

  • Share this:
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமா? உங்கள் கருத்து என்ன? என்று போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சென்னையை பொருத்தவரை மக்கள் நீதி மய்யம் அதிக அளவு வாக்குகளை நாடாளுமன்ற தேர்தலின்போது பெற்றது.

குறிப்பாக தென்சென்னை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்த  நிலையில், சென்னையில் மயிலாப்பூர், தி. நகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிவாரியாக அதிக வாக்குகளைப் பெற்றது மக்கள் நீதி மய்யம்.

எனவே, இந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்ட இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற திட்டமிடலை வகுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இந்த மூன்று தொகுதிகளிலும் மக்களின் கருத்தை கேட்கும் விதமாக ஒரு தொலைபேசி எண்ணை பதிவிட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், உங்கள் தொகுதியில் போட்டியிட நீங்கள் ஆதரவு தருவீர்களா என்று இப்பொழுதே மக்கள் செல்வாக்கை அறிந்து கொண்டு பின்னர் அதிகம் விருப்பம் தெரிவிக்கும் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கே.எஸ்.அழகிரி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் - நெல்லைக் கண்ணன் வலியுறுத்தல்

 

ஆனால் மயிலாப்பூர்,  தி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் போஸ்டர்களை காண முடியவில்லை. ஆனால், ஆலந்தூர் தொகுதியில் அதிக இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால், ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாகவே அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
Published by:Suresh V
First published: