வோடோபோன், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் வரிபாக்கி மட்டும் சுமார் 3.8 லட்சம் கோடி. அதை செலுத்த 15 ஆண்டு சலுகை. ஆனால் சிறுதொழில்களை காக்க நிதியில்லை என்பது நியாயமா? யார் நலனில் அக்கறை கொள்கிறது அரசு? என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் வைத்திருக்கிற பாக்கி, அதற்கு தரப்பட்டுள்ள தவணைக் காலம், பங்குகளாக மாற்றிக் கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பு ஆகியன பற்றி அவையில் நான் கேள்வி (எண் 140/ 02.02.2022) எழுப்பி இருந்தேன்.
அதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங்க் சவுகான், இன்னும் மொத்த ஸ்பெக்ட்ரம் பாக்கி வோடா போன் (2,02,257 கோடி), பாரதி ஏர்டெல் (1,01.828.75 கோடி), ரிலையன்ஸ் ஜியோ (73,958 கோடி) ஆக மொத்தம் சுமார் 3,78,000 கோடி ஆக உள்ளது எனவும், இதற்கான தவணைக் காலம் 15 ஆண்டுகள் (அதாவது 2039 ஆம் ஆண்டு வரை) தரப்பட்டுள்ளது என்று
தெரிவித்துள்ளார். இது தவிர ஏ.ஜி.ஆர் பாக்கி (Annual Gross revenue) 7 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ 89,146 கோடிகள் உள்ளன.
Must Read : இந்தியாவின் அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக களமிறங்கியுள்ளன - தி.வேல்முருகன் காட்டம்
இந்த பாக்கிகள் மீதான வட்டி பாக்கியை நிறுவன பங்குகளாக தரலாம் என்ற வாய்ப்பை அரசு கொடுத்து இருந்தது. நீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்கும் மேலாக ஸ்பெக்ட்ரம் பாக்கிக்கு 4 ஆண்டு தவணை நிறுத்தமும் சிறு கூடுதல் வட்டியோடு தரப்பட்டது. பங்குகளாக மாற்றுகிற வாய்ப்பை வோடாபோன், டாடா டெலிசர்வீசஸ், டாடா டெலி மகாராஷ்டிரா சர்வீசஸ் ஆகியன பயன்படுத்திக் கொண்டுள்ளன என்றும் அவர் பதிலில் தெரிவித்துள்ளார்.
மறுப்பக்கம் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட 2% வட்டிச் சலுகைத் திட்டத்திற்கு (Interest subvention scheme) அரசு வங்கிகளுக்கு தர வேண்டிய மானியத்தை ஆரவாரமே இல்லாமல் அனுப்பாமல் நிறுத்திக் கொண்டது ஒன்றிய அரசு. ஆனால் பெரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு - ரூ 3,78,000 கோடி - 15 ஆண்டு தவணை நீட்டிப்பு என்றால் எவ்வளவு பாசம்!
“கொடை வள்ளல் ஸ்டாலின் ரூ.5,000 கொடுக்க வேண்டும்” - ஓபிஎஸ் பேச்சு
வட்டி பாக்கியை பங்குகளாக மாற்றியதிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 35 சதவீத பங்குகள் அரசின் கைகளுக்கு வந்து விட்டது. அசலுக்கு என்ன செய்வது? 35 சதவீத பங்குகளை வாங்கி அரசு முதன்மை பங்கு தாரராக மாறியும் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. பிர்லாவின் கைகளிலேயே தொடர்ந்து இருப்பதற்கு விதிகளை (AoA) திருத்துவதற்கு அரசு அனுமதித்துள்ளது. 16,000 கோடி ரூபாய் நடவடிக்கை எப்படி அரங்கேறி உள்ளது பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.