மக்களை வதைத்து விட்டு மீனாட்சியை கும்பிட்டால் போதுமா? : மோடிக்கு நடிகை ரோகிணி கேள்வி

மக்களை வதைத்து விட்டு மீனாட்சியை கும்பிட்டால் போதுமா? : மோடிக்கு நடிகை ரோகிணி கேள்வி

நடிகை ரோகிணி

நாட்டு மக்களை எல்லாம் வதைக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி விட்டு, மீனாட்சி அம்மனை வணங்கினால் எல்லாம் சரியாகி விடுமா என நடிகை ரோகிணி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பொன்னுத்தாய் போட்டியிடுகிறார்.பொன்னுத்தாய்க்கு ஆதரவாக வாக்கு கேட்டு நடிகை ரோகிணி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய ரோகிணி, பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்து மக்களை கொடுமை படுத்தினார்கள். இது போல மக்களை வதைக்கும் பல திட்டங்களை எல்லாம் செய்து விட்டு இப்போது மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை கும்பிட்டால் மட்டும் போதுமா?

பாஜகவின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எதிராக உள்ளது. அது நமது அடுத்த தலைமுறையினருக்கும் எதிரானது.
கேஸ் விலை ஏறிவிட்டது. அதிமுக ஆட்சியில் இருந்த போது அதையெல்லாம் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் இப்போது வந்து 6 சிலிண்டர் தர போவதாக சொல்கிறார்கள்.அந்த சிலிண்டரில் கேஸ் இருக்குமோ இருக்காதோ தெரியாது.

விவசாய நிலங்களை கார்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் வேளாண் சட்டங்கள். அதையெல்லாம் அப்போது ஆதரித்து விட்டு இப்போது, அதை தடுக்க போவதாக சொல்கிறார்கள்.

உபியில் கொலை செய்யப்பட்ட தலித் பெண் குழந்தை கொலைக்கு பதிலில்லை. பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.  தூத்துக்குடியில் சுத்தமான காற்றுக்காக ஸ்டெர்லைட் எதிராக போராடிய மக்களை சுட்டுக் கொன்றார்கள்.

மருத்துவ படிப்புகளில் நம் குழந்தைகள் தேர்ச்சி பெற்று விடக்கூடாது என்பதற்காக, பல நுழைவு தேர்வுகளை புகுத்தி உள்ளார்கள்.
அப்படியே படித்து வந்தாலும் நம் குழந்தைகளுக்கு வேலை இல்லை. வட மாநில மக்களுக்கு தான்வேலையில் முன்னுரிமை.இப்படி பல மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்ட அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என பேசினார்.

தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 1ம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி முதல் முறையாக மீனாட்சி அம்மனை வழிபட்டார். இதன் பின்னர் மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: