TN Budget 2021 : பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்க்கப்படுமா?

மதிய உணவு

மதிய உணவு திட்டத்தில் வாழைப் பழத்தை சேர்க்க வேண்டும் என திருச்சி வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்னனர்.

  • Share this:
    தமிழக சட்டசபையில் முதன் முதலாக காகிதமில்லா 'இ - பட்ஜெட்' இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் நிதிநிலை அறிக்கையை காலை 10 மணிக்குத் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா எனற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    வாழை விவசாயத்தை அழிவு பாதையிலிருந்து மீட்டெடுக்க, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் வாழைப் பழத்தை சேர்க்க வேண்டும் என திருச்சி வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்னனர்.

    வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பல்வேறு எதிர்பார்ப்புகளை பகிர்ந்தனர். அந்த வகையில் நீர்நிலை பாதுகாப்புக்கு வரும் பட்ஜெட்டில் அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வகையில் நீராதாங்களை மீட்டெடுத்தால்தான் விவசாயத்தை பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் வேளாண் பண்ணைகளில் விளைபொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட வேளாண் குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Must Read : தமிழகத்தில் இன்று காகிதமில்லா முதல் இ-பட்ஜெட் தாக்கல் : புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

    இதேபோல, மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு நெல்முதல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்னர். திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஆண்டு விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: