Home /News /tamil-nadu /

திமுக ஐடி விங் டிவிட்டர் பக்கம் முடக்கமா? - டி.ஆர்.பி. ராஜா விளக்கம்

திமுக ஐடி விங் டிவிட்டர் பக்கம் முடக்கமா? - டி.ஆர்.பி. ராஜா விளக்கம்

திமுக ஐடி விங்

திமுக ஐடி விங்

DMK IT Wing : திமுக தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ஒருமணிநேரத்திற்கு பிறகு மீண்டும் அது செயல்படத்தொடங்கியது.

    திமுக தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கட்சியின் நிகழ்வுகள், திமுக அரசின் திட்டங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கள் போன்றவை உடனுக்குடன் பகிரப்பட்டுவது வழக்கம்.

    இந்நிலையில், திமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் நேற்று இரவு திடீரென செயல்படாத நிலையில், பாஜக ஆதரவாளர்கள் திமுக ஐடி விங்கின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால், ஒருமணிநேரத்திற்கு பிறகு மீண்டும் அது செயல்படத் தொடங்கியது. இதனால் அந்த டிவிட்டர் பக்கம், ட்விட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், இந்த தடங்கல் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து, திமுகவின் தொழில் நுட்ப பிரிவின் மாநில செயலாளாரும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி. ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.



    அந்தப்பதிவில், “சந்தான பாரதிக்கும் அமித் ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மந்திகளுக்கு தொழில் நுட்ப கோளாறுக்கும், முடக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    Must Read : நான் ஏற்கனவே பொதுச்செயலாளர் தான்.. அவர்கள் தான் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் - ஓபிஎஸ், இபிஎஸ் குறித்து சசிகலா

    மேலும், புதிய சிஸ்டம் இடம் பெயர்வின் போது, சிறிய தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது என்றும், டிவிட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விரைவில் பிரச்னை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Twitter

    அடுத்த செய்தி