ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாட்டின் பிரதமர் கூட்டணி கட்சி தலைவரா? அல்ல அதிமுக தலைவரா? கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

நாட்டின் பிரதமர் கூட்டணி கட்சி தலைவரா? அல்ல அதிமுக தலைவரா? கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

அதிமுக தற்போது மக்கள் பிரச்சனைகள் குறித்து அறிக்கை விடுகின்றனர், ஆனால், ஆட்சியில் இருக்கும்போது கையாளாகாத அரசாக இருந்துவிட்டு, தற்போது மக்கள் பிரச்சனைகாக போராடுகிறேன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றார்.

  • 2 minute read
  • Last Updated :

அதிமுக கோஷ்ட்டி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள டெல்லி பயணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தளவு அதிமுக பலவீனம் அடைந்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  விமர்சித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியார்களை சந்தித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் 3 நாட்கள் நடைபெற்றது, அதில், தமிழக அரசியல் சூழல், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

பாஜக மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, ஒரு நாள் கூட பாக்கி இல்லாமல், அனுதினமும் மக்கள் விரோத மோசமான நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

ஒளிப்பதிவு திருத்த சட்டம், கடல் ஒழுங்காற்று சட்டம், பொது சொத்தை தாரைவார்ப்பது போன்ற மோசமான நடவடிக்கைகளில் தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்திய நாட்டு மக்கள் மீது பாஜக தாக்குதல் நடத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் விரிவான பாஜக எதிர்ப்பு மக்கள் அணியை உருவக்க பங்காற்றுவோம்.

Also read: பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!

தமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நல்ல பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இனியும் பல நல்ல நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். மக்களின் ஆதரவு பெரும் வகையில் திமுகவின் நடவடிக்கை தொடர வேண்டும். வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அதிமுகவில் ஏகப்பட்ட கோஷ்டி ஏற்பட்டு, தற்போது கோஷ்ட்டி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள டெல்லி பயணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் பிரதமர் கூட்டணி தலைவரா? இல்லை அதிமுக தலைவரா என தெரியவில்லை, அதிமுக பலவீனமாக இருப்பதற்கு கோஷ்டி பிரச்சனை குறித்து பிரதமரிடம் முறையிட சென்றுள்ளாதே சான்று.

அதிமுக தற்போது மக்கள் பிரச்சனைகள் குறித்து அறிக்கை விடுகின்றனர், ஆனால், இந்த கோரிக்கைகளை பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி இருக்கலாம். அப்போது கையாளாகாத அரசாக இருந்துவிட்டு, தற்போது மக்கள் பிரச்சனைகாக போராடுகிறேன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றார்.

மேலும் அதிமுக ஆட்சியில் எராளமான ஊழல் குற்றச்சாட்டுள் இருப்பதாகவும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

First published: