Home » News » Tamil-nadu » IS CAUSES CANCER FROM ELECTRICITY TOWER AKP

”செல்போன் கோபுரங்களைவிட உயர் மின் அழுத்த கோபுரங்கள் மிகவும் ஆபத்தானவை”

செல்போன் கோபுரங்களைக் காட்டிலும் உயர் மின் அழுத்த கோபுரங்கள் மிகவும் ஆபத்தானவை என்று தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி கூறியுள்ளார்.

”செல்போன் கோபுரங்களைவிட உயர் மின் அழுத்த கோபுரங்கள் மிகவும் ஆபத்தானவை”
கேன்சர் வரும் அபாயம்
  • News18
  • Last Updated: June 27, 2019, 8:02 PM IST
  • Share this:
உயர் மின்னழுத்த கோபுரங்களால் கேன்சர் வரும் அபாயம் என்று தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக நியூஸ்18-க்கு பேட்டியளித்த அவர்,

உயர் மின்னழுத்த கோபுரங்களால் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.


குழந்தையின்மை, குழந்தைகளுக்கு வளர்ச்சி இன்மை கேன்சர் உள்ளிட்ட தீர்க்க முடியாத நோய்கள் வரும் அபாயம் உள்ளது.

விவசாய நிலங்களின் தன்மை முற்றிலும் மாறிப் போகும். விளைச்சல் கடுமையான அளவுக்கு பாதிக்கும்.

கோபுரங்களை தவிர்த்து பூமிக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்வதே பாதுகாப்பானது. ஆனால் அதற்கு 3 மடங்கு செலவு அதிகம்.உலகின் பல நாடுகளில் பூமிக்கு அடியில் தான் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் தான் கோபுரங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

செல்போன் கோபுரங்களைக் காட்டிலும் உயர் மின் அழுத்த கோபுரங்கள் மிகவும் ஆபத்தானவை என்று நாகல் சாமி கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி கூறியது போன்று அரசு மேற்கொண்டால் பல பிரச்னைகளில் இருந்து முன்கூட்டியே பாதுகாக்கலாம்.

Also watch: சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ரூ.1 லட்சம் அபராதம்… ஊரை விட்டு வெளியேற வேண்டும்…! ஊர் மக்கள் மீது புகார்

First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading