Home /News /tamil-nadu /

சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குயிக்? முதல்வர் ஸ்டாலின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் கவிஞர் வெண்ணிலா

சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குயிக்? முதல்வர் ஸ்டாலின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் கவிஞர் வெண்ணிலா

அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய 'History of the periyar project' நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார்.

அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய 'History of the periyar project' நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார்.

அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய 'History of the periyar project' நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார்.

  முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னி குயிக் தனது சொத்துக்களை விற்று கட்டினார் என, தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு, கவிஞர் வெண்ணிலா மறுப்பு வெளியிட்டுள்ளார்..

  முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணை திட்டத்திற்கு, தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையை கட்டி முடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

  இந்நிலையில் சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குக்? என்று கேள்வி எழுப்பி கவிஞர் வெண்ணிலா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

  பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குக் 181 வது பிறந்த நாள் இன்று. பூனாவில் பிறந்து வளர்ந்த பென்னி பிரிட்டீஷ் இந்திய அரசாங்கத்தின் ராணுவ இன்ஜினியர். பெரியாறு அணை கட்டுவது தென் தமிழகத்தின் நிறைவேறாத நூற்றாண்டு கனவாய் இருந்த வேளையில், காலம் அனுப்பி வைத்த ரட்சகனாய் வந்து அணையைக் கட்டி முடித்த நல்லூழியன்.

  அடர்ந்த காட்டில் நோய்களும் விலங்குகளும் அச்சுறுத்தும் சூழலில் ஒன்பது ஆண்டுகள் போராடி அணை கட்டியவர். அவருக்கு அவரின் சொந்த ஊரான கேம்பர்லியில் சிலை வைக்க இருப்பதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் செய்துள்ள அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடியது.

  மாண்புமிகு முதல்வர் அவர்களின் செய்திக் குறிப்பில் ' ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னி குக் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினார்' என்றுள்ளது. பென்னி குக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது.

  சொத்துக்களை விற்று அணை கட்டினார் என்பதைவிட அவரின் தியாகம் இதில் அதிகம். கட்டப்பட்ட அணை ஐந்து முறை வெள்ளத்தில் அடித்துச் சென்ற போதும் தளராத அவர் உறுதி, உடன் பணி செய்தவர்கள் விபத்திலும் நோயிலும் இறந்த தருணங்களைத் தாங்கி நின்ற மனத்துணிவு, பணியாளர்கள் பாதியில் விட்டு ஓடிப்போகும் போதெல்லாம் புதியவர்களை அழைத்து வந்த விடாப்பிடித்தனம் என பென்னியின் வியந்து போற்ற வேண்டிய அருங்குணங்கள் அநேகம்.

  பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய 'History of the periyar project' நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார்.  சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம். முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை.

  இதையும் படிங்க : நாளை முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்? இயங்காது?

  மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன். ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது.
  பென்னியின் உண்மையான தியாகங்களுக்கு அணையின் உயரமான 176 அடி உயரத்திற்கே சிலை வைக்கலாம்.

  இதையும் படிங்க : Penny cuick: ஆங்கிலேய பொறியாளரை தெய்வமாக கருதி பொங்கல் வைத்து வழிபடும் தேனி மக்கள்

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Published by:Musthak
  First published:

  Tags: Mullai Periyar Dam

  அடுத்த செய்தி