• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamil Nadu Election 2021: ராஜபாளையத்தில் நடிகை கௌதமி பாஜக வேட்பாளர்’: சுதாகர் ரெட்டி பேச்சால் சலசலப்பு

Tamil Nadu Election 2021: ராஜபாளையத்தில் நடிகை கௌதமி பாஜக வேட்பாளர்’: சுதாகர் ரெட்டி பேச்சால் சலசலப்பு

நடிகை கௌதமி

நடிகை கௌதமி

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கௌதமி வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவரும் அதற்காக பாடுபட வேண்டும் என்றார்.

  • Share this:
    அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, ராஜபாளையத்தில் நடிகை கௌதமி வேட்பாளர் என தமிழக பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேச்சால் கூட்டணி கட்சியினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    முன்னதாக சுதாகர் ரெட்டியை மலர்மாலை அணிவித்து, பாஜக இராஜபாளையம் சட்டமன்ற பொறுப்பாளர் கெளதமி வரவேற்றார். உடன் பாஜக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சுதாகர் ரெட்டி பேசுகையில், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கௌதமி வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவரும் அதற்காக பாடுபட வேண்டும் என பேசினார்.

    பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக நடிகை கெளதமி நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் முறையான விதிமுறைகளை அனுசரித்து பேச்சுவார்த்தை நடைபெறும். இறுதி முடிவு எந்த நிலைபாட்டிலும் வெளியாகலாம் என்று கூறினார்.

    தேர்தல் அறிவித்த நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்யப்படாத நிலையில், வேட்பாளர் என அறிவித்து பேசியது கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Must Read: இரவோடு இரவாக ஜெயலலிதா பேனரை அகற்றிய அதிமுகவினர்: முன்னுதாரணம் என பொதுமக்கள் பாராட்டு

     

    இந்நிலையில், இன்று மாலை அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: