நடிகர் அர்ஜுனுக்கு தொகுதியை ஒதுக்குகிறதா பாஜக மேலிடம்?

நடிகர் அர்ஜுன்

வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு கட்சி தாவி விடக்கூடாது என்பது பாஜகவின் நோக்கம்....

  • Share this:
பாஜகவின் வேட்பாளர் பட்டியல் சில தினங்களுக்கு முன்னர் டெல்லி தலைமை வெளியிட்டது. இதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் மூன்று தொகுதிகளுக்கு மட்டும் இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

உதகமண்டலம், தளி மற்றும் விளவங்கோடு உள்ளிட்ட தொகுதிகளுக்கு தற்போதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.  ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி அந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் அவருக்கு கடுமையான எதிர்ப்பு அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்று சொல்லப்படுகின்றது. இதனால் மீண்டும் விஜயதாரணிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு விஜயதாரணி பாஜகவில் இணைவாரா என்ற முனைப்பில் பாஜக நிர்வாகிகள் அவரை அணுகி வருகின்றனர்.

ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்தால் அவருக்கு விளவங்கோடு தொகுதியை விட்டு தருவதற்கு பாஜக திட்டமிட்டு வருகின்றது என்று கூறப்படுகின்றது.  இதனால் அந்த தொகுதியை நிலுவையில் வைத்துள்ளது பாஜன.

அதேவேளையில், தளி தொகுதியில் பாஜக சார்பில் பாஜகவின் நிர்வாகிகள் நரேந்திரன் மற்றும் நரசிம்மன் இருவருக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அத்துடன், நடிகர் அர்ஜுனுக்கு இந்த தொகுதியை ஒதுக்குவதற்கு பாஜக மேலிடம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. ஆனால் நடிகர் அர்ஜுன் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  நடிகர் அர்ஜுன் போட்டியிடுவது வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.  விரைவில் அந்த பட்டியலையும் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதேபோல உதகமண்டலம் தொகுதியை பொறுத்தவரை பாஜகவிற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை நம்பிக்கையான வேட்பாளரை அந்த பகுதியில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என பாஜக மேலிடம் கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.  இதனால் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு கட்சி தாவி விடக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அப்படிப்பட்ட வேட்பாளர் மட்டுமே அந்த தொகுதியில் களம் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தொகுதியில் வெற்றி பெறும் அளவுக்கு பணபலம் அரசியல் பின்புலம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாக சொல்லப்படுகின்றது.

Must Read : ஓபிஎஸ் மகன் காலில் விழுந்த மாணிக்கம் எம்.எல்.ஏ. : வேட்புமனு தாக்கலின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

 

எனவே தமிழக மேலிட பொறுப்பாளர் சிடி ரவியை நேரடியாக உதகமண்டலம் பகுதிக்கு அனுப்பி அங்கே வேட்பாளருக்கான நேர்காணலை நடத்த முடிவு செய்து,  அங்கே சென்றார்.
இந்நிலையில், சிலரை தேர்வு செய்து, அந்த தகவலை டெல்லி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். விரைவில் இந்த மூன்று தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று பாஜக வட்டாரம் தெரிவிக்கிறது.
Published by:Suresh V
First published: