Home /News /tamil-nadu /

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி - அரசாணை வெளியீடு

இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி - அரசாணை வெளியீடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Irular : விஷமுறிவு மருந்துக்காக பாம்புகளை பிடிக்க இருளர் இன மக்களுக்கு முறையான அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு பாம்புகடி விஷமுறிவு மருந்துக்காக, பாம்புகளை பிடிக்க முறையான அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இருளர் இன பாம்பு பிடிப்போருக்கு, வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால், உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் முடங்கி இருந்தது.

    இந்நிலையில், இருளர் இன மக்கள் கோரிக்கையை ஏற்று, பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியதோடு அதிகாரப்பூர்வமாக அரசாணையையும் பிறப்பித்துள்ளது.

    Must Read : பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை குத்த முயன்ற பிளஸ் 2 மாணவன் - வைரலாகும் வீடியோ

    விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய இனங்கள் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Irular, Snake, Tamil Nadu government

    அடுத்த செய்தி