ஆள் மாறாட்டத்தில் கைதான இர்பானின் தந்தையும் போலி மருத்துவர்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

சேலம் சிறைச்சாலையில் உள்ள இர்பானை, தேனி மாவட்டச் சிறைக்கு மாற்றி, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆள் மாறாட்டத்தில் கைதான இர்பானின் தந்தையும் போலி மருத்துவர்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
முகமது சமி, இர்ஃபான்
  • News18
  • Last Updated: October 2, 2019, 5:55 PM IST
  • Share this:
நீட் ஆள் மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள மாணவர் இர்பானின் தந்தை, போலி மருத்துவர் என்பது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் நீட் ஆள் மாறாட்ட புகாரில் மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன் ராகுல் மற்றும் அவர்களின் தந்தை கைது செய்யப்பட்டனர். இடைத்தரகராக செயல்பட்ட கோவிந்தராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மொரிசியஸ் தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்ட தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான், சேலம் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.


அதற்கு முன்னதாகவே இர்பானின் தந்தை முகமது சபியை சுற்றிவளைத்து கைது செய்த சிபிசிஐடி போலீசார் 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், முகமது சபி, போலி மருத்துவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

1990-ம் ஆண்டு விஜய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முகமது சபி முதலாமாண்டு படித்தபோது, அந்த கல்லூரி மூடப்பட்டதும், அதன்பின் வேறெங்கும் படிக்காமல் அவர், மருத்துவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளில் ராஜா மருத்துவர் என்று பெயர் பெற்ற முகமது சபி, அந்த பகுதிகளில் தற்போது மருத்துவமனையே நடத்தி வருகிறார். இதனிடையே, சேலம் சிறைச்சாலையில் உள்ள இர்பானை, தேனி மாவட்டச் சிறைக்கு மாற்றி, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ரஷீத், இடைத்தரகர்களாக செயல்பட்ட ஜெயராமன், வேதாசலம் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Also see:

First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading