ஐரோப்பாவின் மிக நீண்ட கால கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளுள் ஒன்றான அயர்லாந்து நாட்டில், வெற்றிகரமான தடுப்பூசி செலுத்தலுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட அனைத்து தொற்றுநோய் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படும் என்று அந்நாட்டு பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தொடர்ந்து ஆட்டிப்படைத்த வண்ணம் உள்ளது. பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தாலும், தற்போது இரண்டாம் அலை ஓய்ந்த பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த வைரஸை எதிர்த்து போராட நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அந்த வகையில் பல நாடுகள் தங்கள் மக்களுக்கு முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்டதாக கூறியுள்ளன.
அதே போல, அயர்லாந்து நாட்டில் அக்டோபர் 22 முதல் பார்கள் மற்றும் உணவகங்களில் தடுப்பூசி சான்றிதழ்கள் காண்பிப்பதற்கான முறை கைவிடப்படும், எல்லா வகையான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையில் இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக, அடுத்த வாரம் 60 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்கவும் அந்நாடு அனுமதி அளித்துள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களை செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பணிகளுக்குத் திரும்பவும் அந்நாட்டு அரசு பரிந்துரைக்கிறது.
Must Read | மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு… வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை நீட்டித்த கூகுள்!
அயர்லாந்தில் ஏறக்குறைய 90 சதவீத மூத்த குடிமக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி, 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஃபேக்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் உட்புற உணவுகளுக்கு அயர்லாந்தில் 16 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சமீபத்திய வாரங்களில் அயர்லாந்து அரசு லைவ்-ஈவெண்ட்ஸ் துறையால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஏனெனில், பிரிட்டனில் சமீபத்தில் பெரிய இசை நிகழ்ச்சிகள் நடந்தன; இது ஜூலை 19ஆம் தேதி அன்று பெரும்பாலான கட்டுப்பாடுகளை கைவிட வைத்தது. அதனை அயர்லாந்து பிரதமர் அன்றே எச்சரித்தார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்வரும் வாரங்களில் எதிர்பார்க்கப்படும் சரிவுக்கு முன்பாக கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.