அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டிவிட்டரில் டேக் செய்த நெட்டிசன் ஒருவர், மூத்த குடிமக்களுக்கு கீழ் பெர்த்கள் ஒதுக்குவதில் ரயில்வே கடைபிடிக்கும் விதிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அவர் எழுதிய பதிவில், மூத்த குடிமக்களுக்கு கீழ் பெர்த் ஒதுக்குவதில் எளிய வழிமுறையை பின்பற்ற வேண்டும் என கூறியிருந்தார். மூத்த குடிமகனுடன் ஒருவர் வந்தால் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமகன்கள் பயணிக்கும்போது கீழ் பெர்த் ஒதுக்கும் விதிமுறைகள் பொருந்தாது என்பது வியப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமகன்கள் பயணிக்கும்போது, அவர்களால் அப்போது மட்டும் மேலே ஏற முடியுமா? என்றும் வினவியிருந்தார். மேலும், சீட் இருக்கும்போது இதே விதிமுறைகள் பின்பற்றப்படுவது இன்னும் அபத்தமாக இருக்கிறது என்றும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த ஐ.ஆர்.சி.டி.சி, லோயர் (கீழ்) பெர்த்துகள் 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட, பெண்களாக இருந்தால் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கும்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு சீட்கள் ஒதுக்கப்படும். இரண்டு மூத்த குடிமக்கள் அல்லது மூத்த குடிமக்களுடன் இன்னொருவர் பயணம் செய்யும்போது, கீழ் பெர்த் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படாது எனக் கூறியது. ரயில்வே அளித்த இந்த பதிலால் அவர் திருப்தியடையவில்லை.
ஒருவர் உடன் பயணிக்கும்போது மட்டும் சீனியர் சிட்டிசன்களால் மேலே ஏற முடியாமா?, ரயில்வே கொடுத்துள்ள விளக்கம் அபத்தமாக இருப்பதாகவும் மீண்டும் தெரிவித்தார். அரசு ஆசிரியர்கள், ராணுவத்தில் கணவரை இழந்த விதைவைகள், விருது பெற்றவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அனைத்து ரயில் பயணங்களிலும் 50 % பயணச் சலுகை பெறும் மூத்த குடிமக்களுக்கு 51 வகையான சலுகைகளை ரயில்வே வழங்கி வருகிறது.
@IRCTCofficial what logic do you run for seat allocation, I had booked tickets for 3 senior citizens with preference of lower berth , there are 102 berths available, yet allocated berths are middle, upper and side lower. U need to correct same.@AshwiniVaishnaw
— jitendra S (@jitendrasarda) September 11, 2021
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
1. Irctc.co.in/nget/train-search என்ற இணையதளத்துக்கு செல்லுங்கள்.
2. புறப்படும் இடம், சேரும் இடத்தை நிரப்ப வேண்டும்
3. பயணத் தேதி, ரயிலில் பயணிக்கும் விரும்பும் வகுப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. பின்னர் ‘Search Trains ’ என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
5. திரையில் அந்த தேதியில் செல்லும் ரயில்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
6. உங்களுக்கான உகந்த நேரத்தில் பயணிக்கும் ரயிலை தேர்ந்தெடுக்கவும்.
7. அப்போது, வெயிட்டிங் லிஸ்ட், ரயில் டிக்கெட் கட்டணம் திரையில் தோன்றும்.
8. பின்னர், Reservation என்ற ஆப்சனை கிளிக் செய்து, ரயிலை முன்பதிவு செய்யுங்கள்.
9. முன்பதிவுக்கு முன்பு, நீங்கள் பதிவிட்ட தகவல்கள் அனைத்தும் சரியா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
10. ரயில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.