காவல்துறை கஸ்டடியில் நடந்த வன்முறையைக் கண்டிக்கிறோம் - தந்தை, மகன் உயிரிழப்பில் ஐ.பி.எஸ் சங்கம் கண்டனம்

காவல்துறை கஸ்டடியில் நடந்த வன்முறையைக் கண்டிக்கிறோம் - தந்தை, மகன் உயிரிழப்பில் ஐ.பி.எஸ் சங்கம் கண்டனம்
உயிரிழந்த தந்தை மகன்
  • Share this:
காவல்துறை கஸ்டடியில் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டிக்கிறோம் என்று ஐ.பி.எஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இரண்டு எஸ்.ஐக்கள் உள்பட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று பொதுமக்கள், எதிர்கட்சிகள் வலியுறுத்திவந்தன. இருப்பினும், இதுவரையில் கொலை வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்துவருகிறது. இந்தநிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை ஐ.பி.எஸ் சங்கம் கண்டித்துள்ளது.

இதுதொடபான ட்விட்டர் பதிவில், ‘காவல்துறை கஸ்டடியில் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம். தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணை அமைப்பு வெளிப்படையாகவும், விரைவாகவும் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading