தமிழ்நாடு

  • associate partner
Home » News » Tamil-nadu » IPL MATCHES IN SALEM NEW CRICKET GROUND SAN

சேலத்தில் ஐ.பி.எல் போட்டி நடக்கும்... தோனி விளையாடுவார்...! பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்

சேலத்தில் ஐ.பி.எல் போட்டி நடக்கும்... தோனி விளையாடுவார்...! பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்
தோனி
  • News18
  • Last Updated: February 17, 2020, 4:26 PM IST
  • Share this:
சேலம் அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் இன்று திறக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகள் அங்கு நடைபெறும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார்.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில், சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பில், புதிய மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட குழுவினரின் கூட்டு முயற்சியால் சர்வதேச தரத்தில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது, மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் பங்கேற்றனர். பிசிசிஐ முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான சீனிவாசனும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சீனிவாசன் பேசுகையில், சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்றும், தோனி விளையாடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், இயற்கை எழில்கொஞ்சும் மலையடிவார சூழலில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாகியுள்ள இந்த மைதானம், 16 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஐந்து பிட்ச்சுகளை(PITCH) உள்ளடக்கியுள்ளது இந்த மைதானம்.

முன்னதாக, 14 வயதுக்கு உட்பட்ட மாநில அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி போட்டியும் இங்கு நடத்தப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் விரைவில் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படுவதாகவும், அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் ராமசாமி தெரிவித்தார். விரைவில் இங்கு டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading