அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளுக்கு வர உள்ள புதிய ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிஸியான ஆண்டாக இருக்கலாம். ஏனென்றால் வரும் 2022-ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி AR ஹெட்செட்டை அறிமுகம் செய்ய போவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தனது iPad வரிசையை மூன்று புதிய மாடல்களுடன் அப்டேட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Mac Rumours மூலம் பெறப்பட்ட பல அறிக்கைகளின்படி, ஆப்பிள் அதன் பிரபலமான 3 iPad மாடல்களை மேம்படுத்தி அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வெளிவந்துள்ள பல அறிக்கைகளின்படி, ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய iPad Pro-வை 2022-ல் வெளியிட திட்டமிட்டுள்ளது. இது ஒரு புதிய வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை கொண்டு வரும் என கூறப்படுகிறது. மேலும் என்ட்ரி-லெவல் iPad மற்றும் iPad Air-ன் புதிய வெர்ஷன்களை வெளியிடும் என்றும் தெரிகிறது. வரும் ஆண்டில் ஆப்பிள் அதன் மிகவும் பிரபலமான மூன்று iPad மாடல்களான iPad Air 5, iPad 10, iPad Pro உள்ளிட்டவற்றை மேம்படுத்த தயாராக உள்ளதாக பல முன்னணி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
2017-ம் ஆண்டு முதல் ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் சிறிய ஸ்பெசிஃபிகேஷன்கள் மற்றும் அந்த டிவைஸின் குறைந்த விலையை பராமரிக்க சிப் மேம்படுத்தல்கள் உள்ளிட்டவற்றுடன் என்ட்ரி-லெவல் iPad-ன் புதிய வெர்ஷன்களை வெளியிடுகிறது. அதே நேரத்தில் 10-th ஜென்ரேஷன் iPad என்ன அம்சங்களை கொண்டு வரும் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முந்தைய அறிக்கைகள் ஆப்பிள் தற்போதுள்ள 60Hz ஸ்கிரீனுக்கு பதில் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொண்ட புதிய iPad mini-ல் வேலை செய்ய கூடும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ALSO READ | ரூ.5,000 விலைக்குள் மார்க்கெட்டில் கிடைக்கும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்
ஏ15 பயோனிக் சிப்புடன் iPad மற்றும் iPad mini-ஐ ஆப்பிள் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. புதிய ஆப்பிள் iPad Mini 8.3-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் ட்ரூ டோன் திறன்களை கொண்டுள்ளது. இதனிடையே iPad Air 5-ஆனது iPad mini போன்ற திறன்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
+A15 பயோனிக் ப்ராசஸர், சென்டர் ஸ்டேஜ் மற்றும் 5G கனெக்ஷன் அனைத்தும் iPad mini-யின் அம்சங்கள். அதே போல அடுத்த ஆண்டு வெளிவர உள்ள iPad Pro செயல்திறனை அதிகரிக்கும் வகையில் 3-நானோமீட்டர் ப்ராசஸருடன் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய iPad சீரிஸ்களை தவிர, ஆப்பிள் ரீடிசைன் செய்யப்பட்ட iMac மற்றும் MacBook Air-ஐ அடுத்த ஆண்டு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.