ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அயோடின் கலந்த உப்பு மட்டுமே விற்பனை செய்ய அரசு உத்தரவு - தூத்துக்குடியில் உற்பத்தி முடங்கும் அபாயம்

அயோடின் கலந்த உப்பு மட்டுமே விற்பனை செய்ய அரசு உத்தரவு - தூத்துக்குடியில் உற்பத்தி முடங்கும் அபாயம்

உப்பு

உப்பு

”மலைப்பிரதேசங்களில் மட்டும் அயோடின் உப்பு விற்பனை செய்யலாம் என்றும் பிற பகுதிகளில் மனிதனுக்கு தேவையான அயோடின் சத்தை வேறு வகையில் பெற நடவடிக்கை எடுக்கலாம்”

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அயோடின் அல்லாத உப்பு உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பு உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அயோடின் கலந்த உப்பு உற்பத்தியில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன என்பதே பார்க்கலாம்.

  இந்தியாவில் உப்பு உற்பத்தியில் முன்னிலையில் உள்ள மாநிலங்களில் குஜராத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. அதிலும் தூத்துக்கடி மாவட்டம் ஆறுமுகநேரி, தருவைகுளம் உள்ளிட்ட 22 கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

  இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய விதியில் அயோடின் கலந்த உப்பை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பு உற்பத்தி முறை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  அயோடின் உப்பு உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் அயோடின் வாங்கி உப்பளங்களில் கலக்க வேண்டியுள்ளது. ஒரு உப்பளத்தில் மட்டும் அயோடின் கலப்பதற்கு முன்னூறு ரூபாய் வீதம் செலவு பிடிக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான உப்பளங்களில் அயோடின் கலக்க கூடுதலாக செலவு செய்ய நேரிடும் என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள்.

  ஏற்கனவே போதிய வருமானம் இல்லாத சூழலில், அயோடின் கலந்த உப்பு தயாரிக்கும்பட்சத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள்.

  மலைப்பிரதேசங்களில் மட்டும் அயோடின் உப்பு விற்பனை செய்யலாம் என்றும் பிற பகுதிகளில் மனிதனுக்கு தேவையான அயோடின் சத்தை வேறு வகையில் பெற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். மேலும், சாதாரண உப்பை விற்கக் கூடாது என்ற சட்டத்திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உப்பு உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Salt, Tuticorin