அமெரிக்காவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமெரிக்க ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநில வெளியுறவுத்துறை முன்னாள் துணை அமைச்சருமான ராஜன் நடராஜன் சந்தித்து பேசினார்.
பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
ஜூலையில் அமெரிக்காவில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
கொரோனாவால் வெளியே வரவில்லை.. அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றி விழாவுக்கு நேரடியாக வருவேன்: மு.க.ஸ்டாலின்
வெளிநாடு வாழ் தமிழருக்காக உலகப்புலம் பெயர்ந்தோர் நாள் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெளி நாட்டு வாழ் தமிழர் நலன்துறை அமைத்து இருப்பதும் வரவேற்க வேண்டிய ஒன்று.
ஒரு டிரியில்லியன் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வரு பாராட்டத்தக்கது.தமிழகத்தின் சார்பில் வெளிநாட்டில் பிரதிநிதிகளையும் அமைத்து முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க -
குடியரசு தின அலங்கார ஊர்தி முன்பு மாணவர்களுடன் செல்பி எடுத்த மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சீனாவில் அமெரிக்க நிறுவன முதலீடு கடந்த மூன்றாண்டுகளில் குறைந்து வரும் நிலையில், அதை தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பயனளிக்கும்.
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற உதவி செய்வோம். வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பலர் தமிழகம் வரவுள்ளனர். அவர்கள், தொழிற்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.