சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க குடியரசுத்தலைவருக்கு அழைப்பு; மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க குடியரசுத்தலைவருக்கு அழைப்பு; மு.க.ஸ்டாலின்

மூன்றாவது அலை வரக்கூடாது என்பது தான் எங்களது எண்ணம். ஒருவேளை வந்தால், அதனை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து, இன்று பிற்பகல் 12.15 மணியளவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும், முதல்முறையாக குடியரசுத் தலைவரை சந்தித்தேன். முதல்வராக பொற்றுபேற்றுள்ள எனக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு, தனித்தன்மையோடு செயல்பட்டு வரும் சட்டமன்றம் 12.01.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவுப்படுத்தும் வகையில், சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவை தலைமை தாங்கி நடத்தி தரவேண்டும் என குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை குடியரசுத்தலைவர் ஏற்றுகொண்டுள்ளார்.

  Also read: ரயில்வே பணிகளில் 50% இடங்களை தமிழ்நாட்டவருக்கு ஒதுக்க வேண்டும்.. 88% பணிகள் பிற மாநிலத்தவருக்கா? - ராமதாஸ்

  அந்த விழாவில் கலைஞரின் திருவுருவப்படத்தை சட்டமன்ற வளாகத்தில் திறந்துவைக்கப்படும் என்ற அந்த செய்தியையும் கூறினோம். அதையொட்டி, மதுரையில் கலைஞரின் பெயரில் அமைய உள்ள நூல் நிலையம், சென்னை கிண்டியில் அமைய உள்ள அரசு மருத்துவமனை, சென்னை கடற்கரை சாலையில் அமைய உள்ள நினைவு தூண் உள்ளிட்டவைகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு ஒப்புதல் தெரிவித்த குடியரசுத் தலைவர், விரைவில் தேதியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

  7 பேர் விடுதலை குறித்து முதல்வராக பொறுப்பேற்றதும் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால், சட்டப்படி, நீதிமன்றத்தின் மூலமாகத்தான் அணுக வேண்டிய சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து, திமுக அவர்களின் விடுதலைக்கு பாடுபடும்.

  மூன்றாவது அலை வரக்கூடாது என்பது தான் எங்களது எண்ணம். ஒருவேளை வந்தால், அதனை எப்படி சமாளிப்பது என்பதற்கான திட்டங்களிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: