Home /News /tamil-nadu /

முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதலீட்டாளர்கள் மாநாடு

முதலீட்டாளர்கள் மாநாடு

Investors conference 2022 : முதலீட்டாளர் மாநாட்டில், பணிகள் நிறைவடைந்துள்ள 1,497 கோடி மதிப்பீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்ககூடிய 12 நிறுவனங்களின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைப்பெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைப்பெறும் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின்னர், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்த்து வந்தார்.

    இந்நிலையில், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இன்றைய மாநாட்டில், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 22,252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,654 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 21 நிறுவனங்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதவிர, பணிகள் நிறைவடைந்துள்ள 1,497 கோடி மதிப்பீட்டில் 7,050 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்ககூடிய 12 நிறுவனங்களின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 அறிமுகப்படுத்தப்பட்டது.

    Must Read : தனி தமிழ்நாடு கேட்க வைத்துவிடாதீர்கள்.. மோடி, அமித் ஷாவுக்கு ஆ.ராசா கோரிக்கை

    தமிழ்நாடு முதலீட்டுக் கள விழா, தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் இணையம், தமிழ்நாடு இன்ஃபோசிஸ் ஏற்றப்பலகை ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Investment, MK Stalin

    அடுத்த செய்தி