• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதலீட்டாளர்கள் மாநாடு : ஸ்டாலின் முன்னிலையில் ரூ.34,732 கோடி மதீப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதலீட்டாளர்கள் மாநாடு : ஸ்டாலின் முன்னிலையில் ரூ.34,732 கோடி மதீப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

கோவையில் இன்று நடைபெறும் மாநாட்டின் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.34,732 மதீப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 3,928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 11681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

    வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் போடப்படுகின்றது.485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் நிறுவனம் மூலம்1 960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாரக்கப்படுகின்றது. தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசியும், தமிழ்நாடு ஒற்றைச் சாளர கைபேசி செயலி, தமிழ்நாடு நிதி நுட்பகொள்கை 2021 ஆகியவை இன்றைய நிகழ்ச்சியில் வெளியிடப்பட இருக்கின்றது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்த விழாவில், 587.91 கோடி ரூபாய்க்கு முடிவுற்ற, 70 திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்புக்கு, 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின், 25 ஆயிரத்து, 123 பயனாளிகளுக்கு, 646.61 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: