• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிலை குறித்த அறிக்கை செப். 16-ல் தாக்கல் - சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிலை குறித்த அறிக்கை செப். 16-ல் தாக்கல் - சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்புப் படம்)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்புப் படம்)

"கலவரத்தில் காவல் அதிகாரிகளின் பங்கு, வருவாய் துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டகாரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது"

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை குறித்து செப்டம்பர் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், சிபிஐ உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

    2018 ஆகஸ்ட் 14 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையினரிடம் இருந்து 207 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கபப்ட்டுள்ளன. வரும் செப்டம்பர் 16-ல் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படும்.

    பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது.

    கலவரத்தில் காவல் அதிகாரிகளின் பங்கு, வருவாய் துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டகாரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: