மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - முழு விவகாரத்தை விசாரிக்க விசாரணைக்கு குழு அமைப்பு

news18
Updated: April 16, 2018, 7:41 PM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - முழு விவகாரத்தை விசாரிக்க விசாரணைக்கு குழு அமைப்பு
news18
Updated: April 16, 2018, 7:41 PM IST
கல்லூரி மாணவிகளை தவறாக பேராசிரியர் வழிநடத்தியது தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகள் தான் நிர்மலா தேவியால் பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்து போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகின.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு மாணவிகளிடமும் ஸ்பீக்கர் மூலம் பேசிய உதவிப் பேராசிரியை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேராசிரியரை கைது செய்யும்படி மாணவர்களும், சமூக நல ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவிகளை தவறாக பேராசிரியர் வழிநடத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  இந்த பல்கலைகழகத்தின் துணை வேந்தர் செல்லதுரை தலைமையில் இந்த குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்த பின்னரே இந்த விசாரணையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்தால் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்