விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலை மறைக்கின்றது - சூரப்பா மீதான விசாரணை குழு அதிருப்தி!

விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலை மறைக்கின்றது - சூரப்பா மீதான விசாரணை குழு அதிருப்தி!

துணைவேந்தர் சூரப்பா.

3 மாதத்திற்கு முன்னதாகவே சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் மறைப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான முறைகேடு குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் கடந்த நவம்பர் மாத இறுதியில் குழு அமைக்கப்பட்டது அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்,தேர்வு கட்டுபாட்டு அலுவலர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது தொடர்ச்சியாக துணைவேந்தர் மீது புகார் அளித்த நபர்களையும் நேரில் வரவழைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அண்ணாபல்கலைக்கழகம் சரியாக அளிப்பதில்லை என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது விசாரணைக்கு தேவையான ஆவணங்களை கேட்கின்ற போது உரிய ஆவணங்களை தராமல் மறைப்பதாக விசாரணை குழு குற்றம்சாட்டியுள்ளது.

Also read... பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் - பெற்றோர்கள் கருத்து!

மேலும் 3 மாதத்திற்கு முன்னதாகவே சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்காலிக பேராசியர் நியமணம்,விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீது கலையரசன் குழு விசாரனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published: