Home /News /tamil-nadu /

கரு முட்டை விற்பனை... சேலம் தனியார் மருத்துவமனையில் ஆய்வு

கரு முட்டை விற்பனை... சேலம் தனியார் மருத்துவமனையில் ஆய்வு

கருமுட்டை விற்பனை

கருமுட்டை விற்பனை

Salem : கரு முட்டை விற்பனை தொடர்பாக சேலம் தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோட்டில் கரு முட்டை விற்ற வழக்கு தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் தனியார் மருததுவமனையில் விசாரணை மேற்கொண்டனர். ஆவணங்கள் அடிப்படையிலேயே கருமுட்டை எடுக்கப்பட்டதாக விசாரணையின் போது மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின்  கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை, புரோக்கர், ஆவணங்களை போலியாக தயாரித்தவர் என 4 பேர்  மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. அதோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் விசாரணையும் நடந்து வருகிறது.

இதனிடையே இந்த கரு முட்டை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் சென்னை மருத்துவ உயர் மட்ட குழுவினர்  விசாரித்தனர். இதனை அடுத்து,   சேலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளிலும் கருமுட்டை விற்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு நேற்று பகல் 3 மணி அளவில் மருத்துவத்துறை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். பின்னர் மருத்துவமனைக்குள் சென்று கரு முட்டை விற்பனை தொடர்பாக விசாரித்தனர்.

இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஈரோட்டில் கருமுட்டை விற்ற வழக்கில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் விசாரணை செய்து இருக்கிறோம் இதுபோல சேலத்தை அடுத்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் விசாரணை செய்ய இருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதவிர சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்தவமனைகளில் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்றனர்.

Must Read : மனைவியை கொன்று டிரம்மில் உடலை அடைத்த கணவன் - தெலங்கானாவில் பயங்கரம்

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதி மீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆவணங்கள் அடிப்படையிலேயே கருமுட்டை எடுக்கப்பட்டதாக விசாரணையின் போது மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும்,  இளம்பெண் அளித்த தகவலின் அடிப்படையில் தமிழகம் மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தப்படும் எனவும்  சேலத்தில்  உயர்மட்டக்குழு ஆய்வுக்குப் பின்னர் துணை இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Hospital, Investigation, Salem

அடுத்த செய்தி